
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பினால் 90 சதவீத தனியார் பஸ்கள் இன்று இயங்காது -தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம்
இன்று (மார்ச் 22) முதல் சுமார் 90 சதவீத தனியார் பஸ்கள் சேவையிலிருந்து விலகுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் காமுனு விஜேரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், நேற்று (மார்ச் 21) வரலாற்றில் இல்லாத வகையில் எரிபொருள் விலை மிக அதிக சதவீதத்தால் உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விலையேற்றம் காரணமாகபஸ்களை இயக்க முடியாது என பஸ் உரிமையாளர்கள் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.
இதன் விளைவாக இன்று (22) முதல் பெரும்பாலான பஸ்கள் வீதிகளுக்கு இறங்காது என அவர் தெரிவித்தார்.
புதிய பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்ட பின்னரே மீண்டும் பஸ்களை முழுமையாக இயக்க எதிர்பார்ப்பதாக கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.
CATEGORIES Sri Lanka

