பலரும் பார்த்திருக்க மூத்த சகோதரன் இளைய சகோதரன் மீது வாள் வெட்டு

பலரும் பார்த்திருக்க மூத்த சகோதரன் இளைய சகோதரன் மீது வாள் வெட்டு

பதுளை நகர வீதிப் பகுதியில் சகோதரர்கள் இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை பலமுறை வாளால் வெட்டியுள்ளார்.

பதுளை தெஹியனாவெல பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் இடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பதுளை நகரில் வைத்து இந்த வாள் வீச்சு தாக்குதலில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்டது.

பலர் முன்னிலையில் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது தடுக்க அருகில் யார் வந்தாலும் வெட்டுவேன் என வாள் வெட்டை மேற்கொண்ட மூத்த சகோதரன் சத்தமிட்டதால் அங்கிருந்த எவரும் காப்பாற்ற முன்வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கிருந்த பதுளை பொலிஸ் வாகன சாரதி மற்றும் போலீஸ் சார்ஜென்ட் ஒருவரும் தாக்கியவரின் அச்சுறுத்தலையும் மீறி தாக்குதலை தடுத்துள்ளனர்.

உடல் முழுவதும் பலத்த வாள் வெட்டு காயங்கலுக்குள்ளான இளைய சகோதரன் பதுளை மாகாண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக, பதுளை மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் மற்றும் குற்ற தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )