பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

பெங்களூரு – ஐதராபாத் அணிகள் இன்று மோதல்

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.

இந்த நிலையில் லக்னோவில் இன்று (23) நடைபெறும் 65-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்த இந்த ஆட்டம் மழை அச்சுறுத்தல் காரணமாக லக்னோவுக்கு மாற்றப்பட்டது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:

பெங்களூரு: பில் சால்ட் அல்லது ஜேக்கப் பெத்தேல், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் ஷர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணல் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், இங்கிடி, சுயாஷ் ஷர்மா.

ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஜேய்தேவ் உனட்கட்.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )