
பிரபல சிங்கள திரைப்பட நடிகை மாலினி பொன்சேகா இன்று காலமானார்
இலங்கை சிங்கள திரையுலகின் ராணி என்று போற்றப்படுபம் மாலினி பொன்சேகா இன்று காலமானார் .
உடல்நலக்குறைவால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நடிகை மாலினி பொன்சேகா இன்று அதிகாலை காலமானார்.
இவர் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, இலங்கை-இந்தியா கூட்டுத் தயாரிப்பான ‘பைலட் பிரேம்நாத்’ என்ற தமிழ் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்திருந்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பேசப்படும் நடிகைகளில் ஒருவராககினார்.
மாலினி 1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி களனியில் பிறந்தார்.
வன்னி ஆராச்சிகே மாலினி செனஹெலதா பொன்சேகா என்பது இவரது இயற்பெயராகும் .
1963 ஆம் ஆண்டு மேடை நாடகங்களில் அறிமுகமான மாலினி பொன்சேகா, 1968 ஆம் ஆண்டு புஞ்சி பபா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார்.
அம்மாவருனே உற்பட இவர் நடித்த பல தொலைக்காட்ச்சி தொடர் நாடகங்கள் சிறந்த படைப்புகளாக இன்றும் நிலைத்திருக்கின்றன.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள திரையுலகில் கோலோச்சிய மாலினி பொன்சேகா, 1973 ஆம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை வென்ற இவர், ஜனாதிபதி விருது, சரசவி விருது, OCIC விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
2010 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக அரசியலில் நுழைந்த மாலினி பொன்சேகா, 2015 வரை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
பொன்சேகா தனது 78ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

