
நாளை கொழும்பின் பல பகுதிகளில் 12மணிநேர நீர் வெட்டு
நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 12 மணி நேரதிற்கு கொழும்பின் பல பகுதிகளில் ,நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 1 முதல் 15 வரை, கோட்டை, கடுவெல, பத்தரமுல்ல, கொலன்னாவை, கொட்டிகாவத்த, முல்லேரியாவ, ஐடிஎச், மகரகம, தெஹிவல, கல்கிஸ்ஸ, இரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த நீர் விநியோகம் தடைப்படுமென சபை தெரிவித்துள்ளது .
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு அமுல்படுத்தப்டுகிறது .
நீர் விநியோகத்தடையினால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க, தேவையான நீரை முன்கூட்டியே சேமித்து வைக்குமாறு பொதுமக்களை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
கேட்டுக்கொண்டுள்ளது .
CATEGORIES Sri Lanka

