ஜூன் 1 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற ஊழியர்களின் உணவு விலைகளில் திருத்தங்கள்

ஜூன் 1 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற ஊழியர்களின் உணவு விலைகளில் திருத்தங்கள்

ஜூன் 1 ஆம் திகதி முதல் நாடாளுமன்ற ஊழியர்களின் உணவு விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது .

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற குழுவின் தீராமங்களுக்கமைய இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாடாளுமன்ற நிர்வாக மற்றும் நிர்வாகமற்ற ஊழியர்கள் இருவருக்கும் இந்த உணவு விலை திருத்தங்கள் பொருந்தும் எனவும் ,
இதற்கமைய ,நிர்வாக-தர அதிகாரிகளுக்கு, உணவுக்காக மாதத்திற்கு 4,000 ரூபாய் அறவிடப்படுமெனவும் எனவும் நிர்வாக அதிகாரி -தரமல்லாத ஊழியர்களுக்கு 2,500 ரூபாய் அறவிடப்படுமெனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் நாடாளுமன்ற பொது சிற்றுண்டிச்சாலையில் வாங்கும் உணவின் தற்போதைய விலைகளில் மாற்றங்கள் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது .

இந்தத் திருத்தமானது நாடாளுமன்ற ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் திறைசேரி பரிந்துரைகளின் அடிப்படையில், நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுச் செலவை ஈடுசெய்யும் வகையில் , ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் வழக்கமான திருத்தத்தின் ஒரு பகுதியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது .

நாடாளுமன்றக் குழுவானது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை உள்ளடக்கியதாகும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )