நியூசிலாந்து துணைப் பிரதமர் இன்று இலங்கை விஜயம்

நியூசிலாந்து துணைப் பிரதமர் இன்று இலங்கை விஜயம்

நியூசிலாந்து துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இன்று இலங்கை வருகிறார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரும் நியூசிலாந்து துணைப் பிரதமர் இம்மாதம் 28 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

​​நியூசிலாந்து துணைப் பிரதமர் இந்த விஜயத்தின்போது ,
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.

வர்த்தகம், முதலீடு, விவசாயம், கல்வி, தொடர்பாடல் , சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழை குறித்து பேசப்படுவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதும் இந்த விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து துணைப் பிரதமருடன் நியூசிலாந்தின் வெளியுறவு மற்றும் வர்த்தக அமைச்சின் மூன்று முக்கிய அதிகாரிகளும் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )