வெள்ளவத்தையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தையில் கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து ஒருவர் பலி

வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியில் உள்ள கட்டிடமொன்றில் 5ஆம் மாடியிலிருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 59 வயதுடைய ராசையா தவராசா என்பவராவார்.

இன்று (04) காலை மேல் மாடியில் உள்ள நடைபாதைக்கு அருகில் உள்ள மர கைப்பிடியின் உதவியுடன் செய்யப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி ஜன்னல்களை சுத்தம் செய்யும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )