
சிறைச்சாலைக்குள் கைதிகள் அனைவரும் சமமானவர்கள் , உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடையாது – நீதியமைச்சர் இன்று பாராளுமன்றத்தில்
எதிர்கட்சிகளின் பொய்யான பிரசாரங்களை ஒளிபரப்பும் சில ஊடகங்கள் உள்ளன .
கடந்த காலத்தில் ஹியூமன் இம்யூனோகுளோபியுளீன் மருந்து கொள்வனவு தொடர்பில் தவறான கருத்தை வெளியிட்ட ஊடகம் ஒன்று , தற்போது அவ்வாறு செய்தி வெளியிடவில்லை என உறுதியாக பொய் கூறுகின்றது..
ஊடகங்கள் இவ்வாறு செயற்படலாமா ?
இது வெட்கப்படவேண்டிய செயல்
எதிர்க்கட்ச்சியாக இருந்த நேரத்திலும் தற்போது ஆளும் கட்சியில் இருக்கின்ற போதும் கருத்து சுதந்திரத்திற்கு நாம் இடமளிபவர்கள் ..
அந்த வாய்ப்பை எவரும் தவறாக பயன்படுத்துவார்களாயின்
அது குறித்து நாம் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்.
அதேபோன்று நான் நீதிமன்றத்தை அவமதிப்பதாக தவறான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாமல் உட்பட சிலர் என்னை குற்றம் சுமத்துகின்றனர்.
நான் 25 வருடங்களாக நீதிமன்ற செயற்பாடுகளுடன் இனைந்து செய்யப்பட்டவன்
அந்த 25 வருடங்களும் என்னையும் எனது குடும்பத்தையும் அந்த நீதிமன்ற சேவையின் மூலம் கிடைத்த பணம் தான் வாழவைத்தது .
ஆச்சிமார்கலின் சொத்திலோ அல்லது களவாடியோ நான் வாழவில்லை
நீதித்துறையும் நீதிபதியும் சுயாதீனத்தன்மையுடன் இயங்கும் சூழலை
எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது
இலங்கையின் பிரபல தனியார் ஊடகத்தின் உரிமையாளரின் சகோதரர் ஒருவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தப்பட்டு சிறை சென்றார் .
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருமுன்னர் , நோய் எதுவுமில்லாத போதும் ஒன்றரை வருடமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அவர் சொகுசாக இருந்தார் .
நாம் ஆட்சிக்கு வந்ததும் 17 பேர் கொண்ட விசேட வைத்தியர்கள் குழுவை நியமித்து ,அந்த தம்பிக்கு எந்த நோயுமில்லை . அவர் உடல் நலமாக இருப்பவர் எனபதை கண்டுபிடித்தோம்
இந்த உண்மை உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை சிறை கூண்டுக்கு மாற்றினோம்
சிறைச்சாலைகுள்ளும் அனைவருக்கும் ஒரே சட்டம் தான்
எவருக்கும் பாகுபாடு கிடையாது
“நீங்கள் என்ன சொன்னாலும், உங்கள் சகோதரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது .
உங்கள் ஊடகங்கள் மூலம் எங்களுக்கு எதிராகவோ அல்லது தனிநபர்களுக்கு எதிராகவோ தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலம் நீங்கள் ஜனாதிபதி மன்னிப்பை பெற முடியாது
தற்போது வழங்கப்படும் சில தண்டனைகளுக்கான முறைப்பாடுகள் எமது ஆட்ச்சியில் பதிவுசெய்யப்பட்டவையென சிலர் மார் தட்டிக்கொள்கிறார்கள் .
எதுவாகவிருந்தாலும் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்படுவது
எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எனபதை அவர்கள் நினைவுகொள்ளவேண்டும் .

