
செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சியில் 18 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் நேற்றுடன் 18 மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
யாழ் – செம்மணி , சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று இரண்டாம் கட்டத்தின் நான்காம் நாள் அகழ்வுப் பணி இடம்பெற்றது.
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஆனந்தராசா அவர்களது கண்காணிப்பின் கீழ் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி இடம்பெற்றது.
இதன் போது சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றுடன் 18மண்டையோட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இன்று ஐந்து மண்டையோட்டுத் தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த மனிதப் புதைகுழி வழக்கு நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் திறந்தமன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
பிரதீபன்
CATEGORIES Sri Lanka

