
தன்னுயிரை மாய்த்துக் கொண்ட உப பொலிஸ் பரிசோதகர்
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஹசலக, வேரகந்தோட்டையைச் சேர்ந்தவராவர்.
இந்த அதிகாரி, கடந்த சில நாட்களாக தனிப்பட்ட காரணங்களால் மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
CATEGORIES Sri Lanka

