
T-56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது
T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் வைத்து நேற்று (07) கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

