படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்த 05 இலங்கையர்கள் கைது

படகு மூலம் இந்தியாவுக்குள் நுழைந்த 05 இலங்கையர்கள் கைது

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 05 இலங்கையர்களை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 05 பேர் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவை இந்திய கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு வந்ததாக குறித்த நபர்கள் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )