
புத்தளம் வாகன விபத்தில் குடும்பஸ்தர் பலி
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் , புத்தளம் பௌத்த ஸ்தலத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது
புத்தளம், பாலாவி, ஹஸைனியாபுரத்தைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது ஜமீல் என்ற 56 வயதுடைய என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் தனது வீட்டிலிருந்து புத்தளம் நகரில் உள்ள வியாபார நிலையத்திற்கு ஸ்கூட்டி ரக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வவுனியாவிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர் .
சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது விபத்தின் போது தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டதுடன் ,உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக குறித்த தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

