கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உப்புல்தெனிய, அளுத்கடை எண் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கைதிகளை விடுவிப்பதற்காக ஜனாதிபதி மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் நடத்தப்பட்ட விசாரணைகள் தொடர்பாக சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் நேற்று கைது செய்யப்பட்டார்.

அனுராதபுரம் சிறைச்சாலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதியை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் குற்றப் புலனாய்வுத் துறை தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அனுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

நேற்று இரவு அவர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ,அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்வதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )