இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைக்கான முதல்நிலை செயலாளருக்கும், பொருளாதார வர்த்தகதுறைக்கான முதன்மை செயலாளருக்கும் பெருந்தோட்ட ,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைக்கான முதல்நிலை செயலாளருக்கும், பொருளாதார வர்த்தகதுறைக்கான முதன்மை செயலாளருக்கும் பெருந்தோட்ட ,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் துறைக்கான முதல்நிலை செயலாளர் மருத்துவர் சி.ராம்பிரபு மற்றும் பொருளாதார வர்த்தகதுறைக்கான முதன்மை செயலாளர் தேவிகா லால் ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயமாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களை சந்திப்பதற்காக அமைச்சிற்கு விஜயம் செய்திருந்தார்கள்.

இச் சந்திப்பின் போது கீழ் வரும் விடயங்கள் கலந்துரையாடப்பட்டன,

இதன்போது மலையக பெருந்தோட்டத்துறையில் பொருளாதார ரீதியாக சிறுதோட்டம் மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையினை விருத்தி செய்வது சம்பந்தமாகவும் விசேடமாக தெங்கு உற்பத்தியில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தல் இதனோடு இணைந்த இதர உற்பத்திகளை விருத்தி செய்தல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இந்த கலந்துரையாடலின் போது அமைச்சின் சார்பாக அமைச்சின் ஆலோசகரும் பிரத்தியோக செயலாளர் கலாநிதி P.சிவபிரகாசம் இணைப்புச் செயலாளர் திரு ,வசந்தமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் இந்தியாவில் தெங்கு உற்பத்தி சம்பந்தமாக நிபுணத்துவம் பெற்ற நிபுணர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், முதலீட்டார்கள் ஆகியோருடன் இலங்கையில் உள்ள தெங்கு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களுடைய அனுபவங்கள் தொழில்நுட்பங்கள் சம்பந்தமான விடயங்களை பகிர்ந்து கொள்வது சம்பந்தமான கலந்துரையாடலும் , மேலும் மலையக பிரதேசங்களில்
சுய தேவைக்கான தெங்கு உற்பத்தியினை அதிகரிப்பதற்கான முறைமை பற்றியும் மேலதிக தொழில்நுட்ப அறிவை பெற்றுக் கொள்வதற்காக இந்தியாவிற்கான பரிமாற்று திட்டம் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )