
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அவதானம் செலுத்திய ரஷ்யா, ரஷ்யாவில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எச்சரிக்கை
ஈரான் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்துவரும் நிலையில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து ரஷ்ய அதிபர் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன
இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் மோதல் குறித்து ரஷ்யா கவலை கொண்டுள்ளது என ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை , ரஷ்ய மக்கள் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு டெல் அவிவில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரித்துள்ளதுடன், ஏற்கனவே ரஷ்யாவில் உள்ள இஸ்ரேலியர்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை இஸ்ரேலை விட்டு விரைவில் வெளியேறுமாறு இஸ்ரேலில் உள்ள குடிமக்களை ரஷ்ய தூதரகம் வலியுறுத்தியுள்ளது,
மேலும் உள்நாட்டின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் பாதுகாப்பான பகுதிகளில் தங்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேலின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ஈரானின் முக்கிய தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக இஸ்ரேல் ஒரு வேதனைனையை எதிர்நோக்கவேண்டியுள்ளதாவும் எதிர்காலத்தில் இஸ்ரேல் நிச்சயமாக இதை காணும் எனவும் அவர் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.

