களுபோவிலவில் துப்பாக்கிச் சூடு

களுபோவிலவில் துப்பாக்கிச் சூடு

கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில விகாரை வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸை குற்றத் தடுப்பு பணியகம் மற்றும் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )