
கீதா கோபிநாத் இலங்கை வந்தடைந்தார்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (15) நாட்டை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தில் நிதி அமைச்சு, இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது: கடன் மற்றும் நிர்வாகம்” என்ற தலைப்பில் 2025 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ள மாநாட்டில் கீதா கோபிநாத் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

