ஈரானுக்கு எதிராக இராணுவ தாக்குதலை நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து டிரம்ப்  இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் ; வெள்ளை மாளிகை

ஈரானுக்கு எதிராக இராணுவ தாக்குதலை நடத்துவதா? வேண்டாமா ? என்பது குறித்து டிரம்ப் இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் ; வெள்ளை மாளிகை

ஈரான் மீது கடந்த 13-ந்திகதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி நிபந்தனையின்றி சரண் அடைய வலியுறுத்திய அவர், அவர் பதுங்கி இருக்கும் இடம் தெரியும் எனவும் தெரிவித்தார்.

டிரம்பின் இந்த மிரட்டலுக்கு ஈரான் ஷியா பிரிவு உச்சபட்ச மதத்தலைவர் அயதுல்லா அலி அல்-சிஸ்டானி கடும் கண்டனம் தெரிவித்தார். ஈரானின் உச்சபட்ச தலைவர் அல்லது அரசியல் தலைமை மீது எந்தவித தாக்குதலும் நடந்தால், அது இந்த பிராந்தியத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதலை நடத்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“எதிர்காலத்தில் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான கணிசமான வாய்ப்பு உள்ளது என்ற உண்மையின் அடிப்படையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரானுக்கு செல்லலாமா வேண்டாமா என்பது முடிவு செய்யப்படும்.

ஈரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வுக்கு டிரம்ப் வழி திறந்திருந்தாலும், அவரது முக்கிய முன்னுரிமை அந்த நாடு அணு ஆயுதத்தைப் பெறுவதைத் தடுப்பதுதான். எந்தவொரு ஒப்பந்தமும் டெஹ்ரானால் யுரேனியம் செறிவூட்டலைத் தடை செய்ய வேண்டும் மற்றும் அணு ஆயுதங்களை உருவாக்கும் அதன் திறனைக் குறைக்க வேண்டும்.

ஜனாதிபதி டிரம்ப் எப்போதும் ராஜதந்திர தீர்வில் ஆர்வமாக உள்ளார்… அவர் ஒரு அமைதியை நிலைநாட்டுபவர். அவர் வலிமை மூலம் அமைதியை ஏற்படுத்துபவர்” என்று தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )