பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண சூரியப்பெரும இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இந்த ராஜினாமா ஜூன் 20 முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அதற்கமைய பிரதி அமைச்சரின் இராஜினாமாவை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர ஏற்றுக்கொண்டுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு செயலாளர் நாயகம் எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )