
இஸ்ரேலில் அதிகரிக்கும் பதற்றம் இலங்கையர்கள் விழிப்புடனிருக்குமாறு தூதுவர் அறிவிப்பு
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய மற்றும் வடக்கு இஸ்ரேலில் உள்ள நகரங்களை குறிவைத்து இன்று காலை பல ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்தார்.
நிலைமை தொடர்ந்து மோசமடையக்கூடும் என்று கூறப்படுவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமெனவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரபூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டுமெனவும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார வலியுறுத்தினார்.
CATEGORIES Sri Lanka

