
இஸ்ரேல் மிக பெரிய தவறு செய்துவிட்டது
இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த சில நாட்களாக கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, அமெரிக்க இராணுவம், ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும் என்று ஈரானின் உச்சபட்ச தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கிய பின் முதல் முறையாக கருத்து கூறியுள்ள ஈரானின் உச்சபட்ச தலைவர், எந்த இடத்திலும் அமெரிக்காவைப் பற்றியோ, அதன் தாக்குதலை பற்றியோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

