கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்

ஈரான் அணு ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும் எனக்கூறி இஸ்ரேல் கடந்த 13-ந் திகதி திடீரென மீது தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலின் இந்த அதிரடிக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. கடந்த 11 நாட்களாக நடந்து வரும் இந்த மோதல்களால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் நீடித்து வருகிறது.

இதை தொடர்ந்து அமெரிக்கா ‘மிட்நைட் ஹாமர்’ என்று பெயரில் ஈரான் மீது நேரடியாக தாக்குதல் தொடுத்தது. அந்த நாட்டின் 3 இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்களை தாக்கியது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியிருந்தது.

இந்த நிலையில், நேற்று (23) இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )