
புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு
இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வகை இரத்த வகையைக் கண்டுபிடித்துள்ளதாக பிரான்சின் தேசிய இரத்த முகமை அறிவித்துள்ளது.
இந்த புதிய இரத்த வகையை இப்போது சர்வதேச இரத்த மாற்றச் சங்கமும் அங்கீகரித்துள்ளது. EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உலகிலேயே ஒரே ஒருவருக்கு மட்டுமே இந்த வகை இரத்தம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மனிதர்களிடையே ஓ பாசிட்டிவ், ஓ நெகடிவ், பி பாசிட்டிவ், பி நெகடிவ் என ஏகப்பட்ட ரத்த வகைகள் உள்ளன. எமர்ஜென்சி காலத்தில் ரத்தம் தேவைப்படும் போது உட்படப் பல சூழல்களில் இந்த இரத்த க்ரூப் முக்கிய தேவையாக இருக்கிறது.
இதற்கிடையே இப்போது ஆய்வாளர்கள் முற்றிலும் புதிய வகை இரத்தத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
குவாடா நெகடிவ் அல்லது EMM-நெகடிவ் என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். இதுவரை உலகில் இருக்கும் வேறு எந்தவொரு ரத்த வகையைப் போலவும் இது இல்லை. முற்றிலும் தனித்துவமான ரத்த வகையாக இது இருக்கிறது.
கடந்த மாதம் வரை உலகிலேயே இவர் ஒருவருக்கு மட்டுமே இந்த ரத்த வகை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதன் மூலம் மிகவும் அரிதான ரத்த வகையாக குவாடா நெகடிவ் மாறியுள்ளது.
பொதுவாக ஒரு ரத்த வகையைப் புதிதாக அங்கீகரிக்க பல்வேறு கண்டிஷன்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த புதிய ரத்த வகை அந்த அனைத்து கண்டிஷன்களும் பூர்த்தி செய்கிறதாம். மேலும், உலகில் இதுவரை 47 ரத்த வகைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் இது 48ஆவது ரத்த வகையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

