
தலைவன் தலைவி படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு
‘பசங்க’, ‘வம்சம்’, ‘மெரினா’ உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ் அடுத்ததாக விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில், கதாநாயகியாக தேசிய விருது பெற்ற நடிகை நித்யா மேனன், நடிகர் யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம் தயாரிக்கிறது.
இந்நிலையில், ‘தலைவன் தலைவி’ படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் திகதி வெளியாகும் என டைட்டில் டீசர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.
CATEGORIES Cinema

