ஒபாமா – மிச்செல் ஒபாமா விவாகரத்து ?

ஒபாமா – மிச்செல் ஒபாமா விவாகரத்து ?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில், விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு மிச்செல் ஒபாமா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மிச்செல் ஒபாமா,

“எங்களுக்கு 60 வயது ஆகிறது. என் கணவருடன் நான் வெளியில் செல்வதை மக்கள் பார்க்காததால், எங்கள் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக வதந்திகள் பரவுகின்றன. எங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும், நாங்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதில்லை.

இறுதிச் சடங்குகள், பதவியேற்பு விழாக்களில் நான் கலந்து கொள்ள கூடாது என்று நான் முடிவெடுத்தேன். இந்த விஷயங்களில் இருந்து நான் விலகி இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்தது தான் வதந்திகளுக்கு காரணமாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )