
முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானார்.
முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே காலமானார்.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானதாக காமினி லொகுகே குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .
இறக்கும் போது 82 அவருக்கு வயது.
1960 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் நுழைந்த அவர், 1983 ஆம் ஆண்டு கெஸ்பேவ தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு தெரிவாகினார்.
1989 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் சுற்றுலா அமைச்சராகப் பணியாற்றிய காமினி லொகுகே, 2006 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இணைந்தார்.
2007 ஆம் ஆண்டு விளையாட்டு அமைச்சராகப் பணியாற்றிய அவர், 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகினார்.
2019 ஆம் ஆண்டு நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காமினி லொகுகே, 2020 ஆம் ஆண்டு போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார்.

