செம்மணி புதைகுழியை தோண்டி  கடந்தகாலங்களை தேடுவதைவிட எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க  நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்

செம்மணி புதைகுழியை தோண்டி கடந்தகாலங்களை தேடுவதைவிட எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்

“செம்மணி புதைகுழியைத் தோண்டி எலும்புக்கூடுகளை எடுத்து கடந்தகாலங்களைத் தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாமல் இருக்க இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கையே தற்போது முன்னெடுக்கப்பட வேண்டும்.” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் ” செம்மணி புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இறுதிப்பெறும்வரை எம்மால் தீர்மானமொன்றுக்கு வரமுடியாது. அடுத்தக்கட்ட அகழ்வுப்பணியின்போது இராணுவத்தின் இலக்கத்தகடு மீட்கப்பட்டால் விசாரணை அடுத்த கோணத்துக்குள் செல்லும்.

இலங்கை போர் நடைபெற்ற நாடு. புதைகுழி உள்ள இடம் போர் நடைபெற்ற பகுதியாகும். அனைத்து தரப்புகளிலும் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, எந்த தரப்பின் துப்பாக்கிச்சூடுமூலம் மக்கள் உயிரிழந்தனர் என்பது மட்டுமே எமக்கு தெரியாமல் உள்ளது.

உயிரிழந்த மக்களின் எலும்புக்கூடுகளை மீட்டு, கடந்தகாலம் பற்றி தேடுவதைவிட, எதிர்காலத்தில் இப்படியான சம்பவம் இடம்பெறாத வகையில் இதயங்களை குணப்படுத்தும் நடவடிக்கையே இடம்பெறவேண்டும். ஆனால் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாறாக வைராக்கியமே விதைக்கப்படுகின்றது. சர்வதேசம் மற்றும் அடிப்படைவாதக்குழுக்களின் நோக்கமும் இதுதான்.” என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )