செம்மணி மனித புதைகுழி ; இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழி ; இதுவரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 42 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 10வது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது புதிதாக அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலும் ஒரு மனித மண்டை ஓடு அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அழ்வுகளின் போது இதுரை 45 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )