
பிரபல யூடியூபர் மீது வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு
டெக் பாஸ் என்ற சேனல் மூலம் பிரபலமாகி பிறகு டெக் சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் யூடியூப் சேனலை வைத்துள்ள சுதர்சன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 30 சவரன் தங்க நகைகள் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தன்னிடம் மேலும் 20 சவரன் தங்க நகைகளை வரதட்சணையாக கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக யூடியூபர் சுதர்சன் மற்றும் குடும்பத்தினர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
CATEGORIES India

