DNA படத்தின் கண்ணே கனவே வீடியோ பாடல் ரிலீஸ்

DNA படத்தின் கண்ணே கனவே வீடியோ பாடல் ரிலீஸ்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ‘டிஎன்ஏ’.

கடந்த வாரம் வெளியான இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் திரைக்கதை தொடக்கம் முதல் இறுதிவரை மிகவும் விறுவிறுப்பாக செல்வது படத்தின் பலமாக அமைந்துள்ளது.

அதர்வா கடைசியாக நடித்து வெளியான ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

ஆனால் ‘டிஎன்ஏ’ திரைப்படத்தின் மூலம் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக அதர்வாவிடம் இருந்து இப்படி ஒரு படத்தைதான் எதிர்பார்த்திருந்தோம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

‘டிஎன்ஏ’ படம் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாம் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. திரைப்படத்தில் இடம் பெற்ற கண்ணே கனவே வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )