
சிங்கிமலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த மாணவன் சடலமாக மீட்பு
ஹட்டன் சிங்கிமலை நீர் தேக்கத்தில் விழுந்த பாடசாலை மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்ட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஹட்டன், கொட்டகலை, கேம்பிரிட்ஜ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 13 ஆம் தரத்தில் கல்வி கற்று வரும் மாணவர் ஆவார்.
குறித்த மாணவன் தனது 06 நண்பர்களுடன் நேற்று(08) மதியம் புகைப்படம் எடுக்க நீர்த்தேக்கத்திற்கு மேலே உள்ள சிங்கிமலை வனப்பகுதிக்குள் நுழைந்து பின்னர் நீர்த்தேக்கத்தின் நீரில் கால்களைக் கழுவ முயன்றபோது நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்ததாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
CATEGORIES Sri Lanka

