கஞ்சா செடிகளுடன் இருவர் கைது

கஞ்சா செடிகளுடன் இருவர் கைது

ஹம்பாந்தோட்டை பறவை பூங்காவில் உள்ள களஞ்சியசாலையொன்றில் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 21 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 4 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடத்த இரகசிய தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையின் போதே குறித்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கஞ்சா செடிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )