
கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய நிலவரம்
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (15) வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
நேற்றைய (14) வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண், இன்று வர்த்தக நாள் ஆரம்பத்தில், வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம், 1.29 பில்லியன் ரூபாயாக பதிவாகியுள்ளது.

