சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

ஆடி மாத பூஜைக்காகசபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (15) திறக்கப்பட்டது.

கோவிலில் இன்று (17) முதல் 21-ந் திகதி வரை 5 நாட்கள் தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை மற்றும் தந்திரி தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும் எனவும் 21-ந் திகதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )