
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகர்ப்பு
நாட்டில் இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17,459 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 5,018 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
CATEGORIES Sri Lanka

