வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டின் வானிலை நிலைமைகள் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாளை (18) முதல் அடுத்த சில நாட்களில், மத்திய மலைநாடு மற்றும் அதன் மேற்கு சரிவுப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாடு முழுவதும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், மாற்றமடையும் வானிலை நிலைகளுக்கேற்ப அடுத்தடுத்த முன்னறிவிப்புகள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )