
விமான நிலையத்தைச் சுற்றி பட்டம் பறக்க தடை
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டங்கள் பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர் அருண ராஜபக்ஷ பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பை புறக்கணிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டின் எந்தவொரு சர்வதேச விமான நிலையத்திலிருந்தும் 5 கி.மீ சுற்றளவில், 300 அடி உயரத்துக்கு மேல் பறக்கும் பட்டங்கள் அல்லது எந்தவொரு வான் பொருட்களுக்கு தடைவிதிக்கப்படும் என இது குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
“விமான நிலையத்தைச் சுற்றி பட்டங்களை பறக்கவிடுவது விமானங்களுக்கும் விமானப் பயணிகளின் உயிருக்கும் பாரிய ஆபத்தை ஏற்படுத்தும் .
இதனால் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குள் பட்டங்களை பறக்கவிடுவதைத் தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் தலைவர்
அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்

