பேருவளையில் மீனவர் ஒருவர் காற்றில் சிக்கி கடலில் காணாமல் போயுள்ளார்

பேருவளையில் மீனவர் ஒருவர் காற்றில் சிக்கி கடலில் காணாமல் போயுள்ளார்

பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்றில் சென்ற மீனவர் ஒருவர் இன்று அதிகாலை பலத்த காற்றில் சிக்கி காணாமல் போயுள்ளளார் .

விபத்துக்குள்ளான படகில் 6 மீனவர்கள் இருந்ததாக மீன்பிடித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜெனரல் சுசந்த கஹவத்த கூறினார்.

கடந்த 15 ஆம் திகதி புறப்பட்ட படகு இன்று கரை திரும்பிகொண்டிருந்த போது பேருவளை கடல் பகுதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

தொடங்கொட பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவரே காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )