
இலங்கைக்கு பலத்த காற்று எச்சரிக்கை அறிவிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது .
மேல் , சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் இந்த அதிக வேகத்துடன் காற்று வீச்சாக கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
நாட்டின் ஏனைய பகுதிகளில் மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

