
மஸ்கெலியாவில் பலத்த காற்றில் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் பலி
மஸ்கெலியா, புரவுன்சீக் தோட்ட மோட்டீங்ஹேம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலத்த காற்றில் முறிந்த மரக்கிளை அப்பகுதியில் விறகு சேகரிக்க சென்றவர் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
44 வயதுடைய ஒருவரே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

