இன்று நாட்டில் சில பகுதிகளுக்கு ஓரளவு பலத்த மழை

இன்று நாட்டில் சில பகுதிகளுக்கு ஓரளவு பலத்த மழை

மேல் , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது .

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது .

மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகளிலும் மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் எனவும்
வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது .

பலத்த காற்றினால் ஏற்படும் அபாயங்களைக் குறைதுக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வானிலை அவதான நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )