
நாரம்மல கார் விபத்தில் 9 மற்றும் 11 மாதங்களேயான இரண்டு சிசுக்கள் உட்பட மூவர் பலி
நாரம்மல கார் விபத்தில் 9 மாதங்கள், 11 மாதங்களேயான இரண்டு சிசுக்கள் மற்றும் 38 வயதுடைய ஓட்டுனரும் உயிரிழநதனர்.
நாரம்மலபொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று பிற்பகல் வேககட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியின் வலதுபுறத்தில் இருந்து விலகி எதிர் திசையில் வந்த பஸ்ஸின் மீது மோதி விபத்துக்குள்ளது.
இந்த விபத்தில் பஸ் ஓட்டுநர், நடத்துனர் மற்றும் பயணி ஒருவர் காயமடைந்து தம்பதெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாரம்மல போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

