தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பல் ; 5 பேர் பலி

தீப்பிடித்து எரிந்த சொகுசு கப்பல் ; 5 பேர் பலி

இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்தில் இருந்து புறப்பட்டகே.எம்.பார்சிலோனா-5 என்ற சொகுசு கப்பல் மனாடோ என்ற இடத்துக்கு அருகே சென்றபோது தீப்பிடித்து எரிந்துள்ளது.

கப்பலில் தீ வேகமாக பரவியதால் அதில் இருந்த பயணிகள் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்த தகவலறிந்த கடலோர பொலிஸார் அங்கு விரைந்தனர். அப்போது அவர்களுக்கு உதவியாக உள்ளூர் மீனவர்களும் களமிறங்கியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த கப்பலில் பயணித்த 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 575 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )