
செம்மணியில் குழந்தைகளின் மனித எச்சங்களும் அடையாளம்
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு – கட்டம் 2, 17ஆவது நாள் அகழ்வு நேற்று (23) முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி இடத்தில் நேற்று (23) மொத்தம் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன.
எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன .
ஒரு குழந்தைகள் அருந்தும் பால் போச்சி( போத்தல்) மற்றும் சில ஆடையை ஒத்த துணிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
நேற்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.


பிரதீபன்
CATEGORIES Sri Lanka

