
40 நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம்
40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) நடைபெற்ற விழாவில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

