கால்வாயில் விழுந்து 4 வயது குழந்தை பலி

கால்வாயில் விழுந்து 4 வயது குழந்தை பலி

திம்புலபத்தன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரோசிட்டாவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் நேற்று காலை கால்வாயில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டகலையைச் சேர்ந்த 4 வயது குழந்தை ஒன்று இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் டிக்கோயா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், திம்புலபத்தன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கடந்த 26 ஆம் திகதி பிற்பகல், பொலனறுவை பொலிஸ் பிரிவின் பத்தினி பிளேஸ் 02 பகுதியில் உள்ள கால்வாயில் குளிக்கச் சென்ற 38 வயதுடைய நபர் ஒருவர் நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நவநகர மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பொலனறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )