
அமெரிக்க விமானத்தில் தீ விபத்து
அமெரிக்காவின் கொலராடோ மாநிலம் டென்வர் சர்வதேச விமான நிலையத்திலிருந்தது மியாமிக்கு புறப்படவிருந்த விமானத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பயணிகள் விமானத்தின் அவசரகால கதவுகள் வழியாக அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் டயரில் தீ மற்றும் புகை ஏற்பட்டது.
விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டது மற்றும் அதில் இருந்த 173 பயணிகளும் 6 விமான பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 6 பயணிகளும் சிறிய அளவில் காயமடைந்ததாகவும், ஒரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான போயிங் 737 மெக்ஸ் (Boeing 737 Max ) விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளது.

