
ஜூலை மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு நாளைகிடைக்கும்
ஜூலை மாதத்திற்கான முதியோர் உதவித்தொகை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
3,003,840,000 ரூபா உதவித்தொகை தொகை 600,768 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
இதனடிப்படையில் பயனாளிகள் நாளை முதியோர் உதவித்தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
CATEGORIES Sri Lanka

